கல்லூரி மாணவர்களின் பேச்சு போட்டியினை தொடங்கி வைத்த அமைச்சர் மா. மதிவேந்தன்.

X

கருத்துகளை சிந்தித்து அனைவரது மனதிலும் பதியும் வகையில் பேச வேண்டும். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் நாமக்கல் மாவட்டத்தில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட பேச்சு போட்டியினை தொடங்கி வைத்து பேச்சு.
நாமக்கல் மாவட்டம், பாச்சல், பாவை கல்வி நிறுவனத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, தலைமையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை சேர்ந்த 480-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட பேச்சு போட்டி – 2025 யினை தொடங்கி வைத்தார். இம்முகாமில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது,தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப்போட்டி இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரால் வழங்கப்பட உள்ளது. நாம் யார் என்பது நம் பேச்சில் தான் தெரியும். நாம் பேசும் போது கருத்துகளை சிந்தித்து அனைவரது மனதிலும் பதியும் வகையில் பேச வேண்டும். பேச்சுப்போட்டி என்பது நாம் யார் என்பதையும், நம் கருத்துகளையும் மற்றவர்களுக்கு உணர்த்த கூடிய நிகழ்ச்சி ஆகும். உலகத்தை மாற்றி 3 நபர்களின் உரை இன்று வரை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் பேசிய கருத்தும், அவர்களது கருத்தை எடுத்துரைத்த விதமும் தான். குறிப்பாக பேச்சு என்பது மற்றவர்கள் நம்மை பற்றி நினைக்கும் எண்ணத்தை நேர்மறையாக மாற்ற கூடிய சக்தி வாய்ந்தது. குறிப்பாக 1963 ஆம் ஆண்டு மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் புகழ்பெற்ற ”எனக்கு ஒரு கனவு இருக்கிறது” என்று வாஷிங்டனில் வேலைகள், பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்திற்கான உரையாற்றினார். 1940 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் ஐக்கிய நாடாளுமன்றத்தில் ”நாம் கடற்கரையில் போராடுவோம்” என்ற தலைப்பில் உலக போரில் இராணுவ படையின் தாக்கம் பற்றியும், படையெடுப்பு முயற்சி, படை வீரியம் குறித்தும் எடுத்துரைத்தார். மேலும், 1961 ஆம் ஆண்டு ஜான் எஃப் கென்னடி வாஷிங்டனில் அதிபராக பொறுப்பேற்ற போது பேசிய உரையும் இன்றளவும் சிறப்பு வாய்ந்தாக கருதப்படுகிறது. அதுபோல தமிழ்நாட்டிலும் அறிஞர் அண்ணா அவர்களின் உரை சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். குறிப்பாக திராவிட கொள்கைய பறைசாற்றும் விதமாகவும், முற்போக்கு சிந்தனையும், ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட மக்களின் குரலாய் அவரது உரை இன்றளவு போற்றப்படுகிறது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பேச்சிற்கும், எழுத்திற்கும் எடுத்துக்காட்டாக இன்றளவு திகழ்கிறார்கள். அதுபோல நம் தமிழ்நாடு முதலமைச்சர் ஒவ்வொரு கருத்தும், உரையும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. மாண்புமிகு துணை முதலமைச்சர் இன்றைய இளைஞர்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் தனது கருத்துகளை ஆக்கப்பூர்வமாகவும், எளிமையாகவும் எடுத்துரைத்து வருகிறார்கள். இவர்களை போல நீங்களும் பேச்சுப்போட்டியில் தங்கள் கருத்துகளை சிந்தித்து சிறப்பாக வெளிப்படுத்திட வேண்டும். உங்களது ஒவ்வொரு சொல்லும் மற்றவர்களது மனதில் நீங்க இடம் பெறும் வகையில் அமைந்திட வேண்டும். பேச்சுப்போட்டியில் பங்கு பெற்றுள்ள அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்களின் குரலாய் விளங்கி வருகின்றார்கள். அவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வெற்றி பெற்றுள்ளார்கள். ஏழை, எளிய மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையில் மாதம் ரூ.1,000/- வழங்கும் புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், மருத்துவம், பொறியியல், சட்டம், வேளாண்மை உள்ளிட்ட உயர்கல்வி பயில 7.5 சதவிகிதம் இடஒதுக்கீடு உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள்.இன்றைய தினம் பாவை கல்லூரியில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப்போட்டி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை சேர்ந்த 480 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். குறிப்பாக இராசிபுரம், குமாரபாளையம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அரசு கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கு பெற்றுள்ளார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தாய் மொழியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற தத்துவத்தை மனித குலத்திற்கு அளித்து மொழி சிறப்பினை உலகிற்கு எடுத்துரைத்த மொழி தமிழ் மொழி. தாய் மொழியின் முக்கியத்துவத்தை அறிந்த ரஷ்யா, ஜெர்மனி நாட்டினர் இன்றளவும் தாய் மொழியில் தான் கல்வி கற்பித்து வருகின்றார்கள். அவர்கள் தாய்மொழியின் மகத்துவத்தை உணர்ந்தவர்கள். ஆங்கிலம் என்பது தொடர்பு மொழி மட்டுமே. தமிழ் மொழி தான் நம் இனத்தின் அடையாளம். நம் பெருமை. பிற மொழி திணிப்பை நம் அரசு என்றும் ஏற்காது. குறிப்பாக வட மாநிலங்களாகிய மகாராஷ்ட்ராவில் தாய் மொழியை பயன்பாடு குறைந்து வருவதை உணர்ந்த அம்மாநில முதலமைச்சர் அவர்கள் பள்ளிகளில் தாய் மொழியான மராத்தி மொழியை கற்பிக்க உத்தரவிட்டுள்ளார்கள். ஒரு மொழி தான் அந்த இனத்திற்கான அடையாளம். மொழி அழித்தால் அந்த இனம் அழிந்து விடும். தாய் மொழி தான் உயிர் மொழி என்பதை நாம் உணர வேண்டும். மொழி உரிமையை நாம் ஒருபோது விட்டுதர கூடாது என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் கான்ஸ்ன்டைன் ரவீந்திரன், முனைவர் ஜெ.ஹாஜாகனி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மு.கிருஷ்ணவேணி, பாவை கல்லூரி நிறுவனர் மற்றும் தலைவர் என்.வி.நடராஜன், கல்லூரி மாணவ, மாணவியர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story