தனிநபர் உரிமைச் சான்றுகளை வழங்கிய அமைச்சர் மா. மதிவேந்தன்.

X
NAMAKKAL KING 24X7 B |13 March 2025 6:09 PM ISTஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் நாரைகிணறு பகுதியில் நான்கு தலைமுறையாக வன நிலத்தில் விவசாயம் செய்து வந்த 25 பழங்குடியின மக்களுக்கு தனி நபர் உரிமைச் சான்றுகளை வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், நாரைக்கிணறு, ஊத்துப்பள்ளக்காடு கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் இன்று மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, தலைமையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் முன்னிலையில், நான்கு தலைமுறையாகவும், சுமார் 70 ஆண்டுகளாகவும் வன நிலத்தில் விவசாயம் செய்து வந்த 25 பழங்குடியின மக்களுக்கு குறைந்த பட்சம் 0.06 சென்ட் முதல் அதிகபட்சமாக 3.51 ஏக்கர் வரை தனி நபர் உரிமைகளாக உரிமைச் சான்று வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு ஏழை, எளிய மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றார்கள். குறிப்பாக தேர்தலில் தனக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்ற பாகுபாடின்றி அனைத்து மக்களுக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டுமென்ற உன்னத நோக்கத்தில் பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி வருகின்றார்கள். குறிப்பாக தேர்தலின் போது இப்பகுதி மக்கள் பட்டா வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்கள். அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றி அவர்களது கனவை நனவாக்கும் வகையில் நாரைகிணறு பகுதி மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இன்றைய தினம் வனப்பகுதியில் பழங்குடியின மக்கள் வன நிலத்தில் குடியிருந்து விவசாய மேற்கொண்டு வந்துள்ளார்கள். இன்றயை தினம் 25 பழங்குடியின மக்களுக்கு தனி நபர் உரிமைகள் ஆணை வழங்கப்பட்டுள்ளது. பழங்குடியின மக்கள் வனத்தை சார்ந்து வாழ்ந்து வருபவர்கள். வனம் சார்ந்து விவசாய தொழில் மேற்கொண்டு தங்கள் வாழ்க்கையை நடத்தி வருபவர்கள். இம்மக்களின் நலன் காக்க அவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து நீண்ட நாள் கோரிக்கை ஏற்று தனி நபர் உரிமை சான்று வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஒவ்வொரு மக்களின் தேவைகளையும் நிறைவேற்றிட வேண்டுமெனவும், குறிப்பாக பழங்குடியின மக்களின் தேவைகளை பூர்த்தி செய்திட உத்தரவிட்டு அரசு துறையினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தொடர்ந்து பணியற்றி அரசின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வனப்பகுதியில் வனம் சார்ந்து வாழும் மக்களின் தேவைகளை நிறைவேற்றிட மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வனம் என்பது மிக முக்கியமாக ஒன்றாகும். வனம் சார்ந்து தான் நம் அனைவரது வாழ்க்கையும் உள்ளது. அதனடிப்படையில் வன உரிமைச்சட்டத்தின் படி 25 பழங்குடியின மக்களுக்கு சுமார் 31.92 ஏக்கர் செண்ட் நிலத்திற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. எனவே அரசின் அனைத்து திட்டங்களையும் பொதுமக்கள் பயன்படுத்தி கொண்டு தங்கள் தேவைகளை நிறைவேற்றி கொள்ள வேண்டுமென ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தெரிவித்தார்கள். தொடர்ந்து, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் 25 பழங்குடியின மக்களுக்கு தனி நபர் உரிமைச்சான்றுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.இராமசுவாமி, வன பாதுகாவலர் (நாமக்கல் வன கோட்டம்) சி.கலாநிதி., நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் வே.சாந்தி, பழங்குடியினர் திட்ட அலுவலர் கீதா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
