தமிழ்நாடு மாநில சிறுபான்மையர் ஆணையம் நடத்தும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இடையேயான பேச்சு போட்டி

X

தமிழ்நாடு மாநில சிறுபான்மையர் ஆணையம் நடத்தும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இடையேயான பேச்சு போட்டி
தமிழ்நாடு மாநில சிறுபான்மையர் ஆணையம் நடத்தும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இடையேயான பேச்சு போட்டியை அமைச்சர் மதிவேந்தன்,எம்.பி ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.. ஒரு இனத்திற்கு அடையாளம் மொழி,வேறொரு மொழியை திணிப்பதை தமிழ்நாடு எப்போதும் ஏற்றுக்கொள்ளாது என எம்.பி ராஜேஷ்குமார்... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பாச்சல் அருகே உள்ள தனியார் (பாவை) பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையர் ஆணையம் நடத்தும் கல்லூரி மாணவ மாணவியருக்கு இடையேயான பேச்சுப் போட்டி துவக்க விழாவானது நடைபெற்றது.இதில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா. மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் KRN.ராஜேஷ் குமார்,மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, மற்றும் தி ரைசிங் சன் ஆங்கில இதழ் மாநில ஒருங்கிணைப்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், பேராசிரியர் மாநில ஒருங்கிணைப்பாளர் ஹாஜா கனி உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டு பேச்சுப் போட்டியை துவக்கி வைத்தனர். இப் போட்டியில் மாவட்டத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் KRN.ராஜேஷ் குமார் பேசுகையில் ஒரு இனத்திற்கு அடையாளம் மொழி,வேறு மொழியை திணிப்பது தமிழ்நாடு எப்போதும் ஏற்றுக்கொள்ளாது. மகாராஷ்டிரா மாநிலத்தின் மொழி மராத்தி,குஜராத்தின் மாநில மொழி குஜராத்தி ஆனால் அங்கு இந்தி திணிக்கப்பட்டதால் மாநில மொழி அழிந்துவிட்டது. ஒரு மொழி அழிந்தால், ஒரு இனமே அழிந்து விடும்,ஒரு மொழி தான் நம்மை காப்பாற்றும். அருகாமையில் உள்ள கர்நாடகா மாநிலத்தில் மெல்ல மெல்ல ஹிந்தி மொழியின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது அங்கு தாய் மொழிக்கு விடப்பட்டுள்ள சவால். தாய்மொழி என்பது நமது உயிர் மொழி திராவிட முன்னேற்ற கழகம் உள்ளவரை தமிழை காப்போம் என மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ் குமார் பேசினார். தொடர்ந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் அவர்கள் பேசுவதில் பேச்சுப்போட்டி என்பது மிகவும் சாதாரண விஷயம் அல்ல மாணவர்கள் அதனை நன்கு கற்று பேசி தங்களது திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய ஒரு விஷயமாகும். தான் எவ்வளவு பெரிய மனிதன் என மற்றவரை திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு உங்களது பேச்சு இருக்க வேண்டும், பேச்சுப்போட்டி இப்பொழுது மட்டுமல்ல கடந்த காலங்களில் கூட மூன்று பேச்சுக்கள் நமது நாட்டின் நிலையை குறித்து அன்றே பல அறிஞர்களும் மேதைகளும் பேசி உள்ளனர். அது இன்றளவும் அனைவரும் மனிதனும் ஒலித்துக் கொண்டுள்ளது. எனவே மாணவர்கள் தங்களது தனித்திறமையை வெளிக் கொண்டு வர இது ஒரு சந்தர்ப்பம் இதனை நன்றாக பயன்படுத்தி நீங்கள் வெற்றி பெற வேண்டும் என அவர் பேசினார். அதனை தொடர்ந்து தி ரைசிங் சன் ஆங்கில இதழ் மாநில ஒருங்கிணைப்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் மாணவ மாணவிகளிடம் மொழி கொள்கை குறித்து கேட்டு,எங்களுக்கு இரு மொழி கொள்கையை போதும். மும் மொழிக் கொள்கை வேண்டாம் என 2000 மாணவ மாணவிகள் தற்போது ஒப்புதல் வழங்கி உள்ளனர். இந்த விழாவில் பாவை கல்வி நிறுவனங்கள் தலைவர் சில.என்.வி. நடராஜன், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பி ராமலிங்கம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திருமதி மு. கிருஷ்ணவேணி, பாவை கல்வி நிறுவனங்கள் முதல்வர் எம். பிரேம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story