தக்கலை அருகே வாகன மோதி முதியவர் பலி

தக்கலை அருகே வாகன மோதி முதியவர் பலி
X
கன்னியாகுமரி
தக்கலை அருகே விலவூர் பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி (90). இவர் நேற்று பறைக்கோடு பகுதியில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று திடீரென குமாரசாமி மீது பயங்கரமாக மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட குமாரசாமி படு காயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை பார்த்தபோது குமாரசாமி  ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.. இது குறித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து குமாரசாமி மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story