சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோவில் கைது

சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோவில் கைது
X
சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோவில் கைது
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அஜித் கர்மாகர் (25) இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே தனி யார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வரு கிறார்.தனது குடும்பத்துடன் அந்த பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த சிறுமி கர்ப்பம டைந்தார். தற்போது அந்த சிறுமி, 1 அரை மாத கர்ப்பிணியாக இருப்பதை அறிந்த அவரது தாயார் அதிர்ச்சி அடைந்தார்.இது குறித்து ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாயார் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அஜித் கர்மாகரை போக்சோவில் கைது செய்தனர்.
Next Story