பள்ளி கழிவு ஓடையில் தவறி விழுந்து காவலாளி பலி

பள்ளி கழிவு ஓடையில் தவறி விழுந்து காவலாளி பலி
X
கன்னியாகுமரி
குமரி மாவட்டம் தென்தாமரைகுளம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (67). இவர் அகஸ்தீஸ்வரம்  பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 4-ம் தேதி இரவு சபள்ளி வளாகத்தை சுற்றி வந்த போது இருட்டில் தவறி அங்குள்ள சிமின்ட் கழிவு நீர் ஓடையில் விழுந்துள்ளார்.  இதில் காயம் அடைந்த அவரை கொட்டாரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்துள்ளனர். பின்னர் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல்  சிகிச்சைக்கு  சேர்த்துள்ளனர்.       அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று உயிரிழந்தார். கீழே விழுந்ததில் அவரது சிறுநீரகத்தில் பலத்தகாயம்  ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான புகாரின் பேரில் தென்தாமரை குளம் போலீசார் இன்று  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story