காவேரி கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் வினியோகிக்கப்படும் குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படவில்லை

காவேரி கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் வினியோகிக்கப்படும் குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படவில்லை
X
ஊரக உள்ளாட்சித் துறைஅதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கபட்படும் உரிய நடவடிக்கை இல்லாததை கண்டித்து இன்று காலை, நாரணமங்கலம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு, சாலை மறியல் போராட்டத்தில் இன்று காலை ஈடுபட்டனர்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே நாரணமங்கலம் கிராமம் உள்ளது. சுமார் 3 ஆயிரம் பேர் வசித்து வரும் அந்த ஊரில், கடந்த சுமார் மாதமாக காவேரி கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் வினியோகிக்கப்படும் குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படவில்லை என்றும், இது குறித்து ஊரக உள்ளாட்சித் துறைஅதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கபட்படும் உரிய நடவடிக்கை இல்லாததை கண்டித்து இன்று காலை, நாரணமங்கலம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு, சாலை மறியல் போராட்டத்தில் இன்று காலை ஈடுபட்டனர்.அப்போது, அவ்வழியாக வந்த அரசு பேருந்தையும், சிறைப்பிடித்தனர். இதனால், சுமார் அரை மணி அப்பகுதியில்அப்போது, அவ்வழியாக வந்த அரசு பேருந்தையும், சிறைப்பிடித்தனர். இதனால், சுமார் அரை மணி அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பினனர். நாரணமங்கலம் ஊராட்சி ஆபீசையும் முற்றுகையிட்டனர். இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் மற்றும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். திருச்சி மாவட்டம், தாப்பாய் கிராமத்தில்கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட விநியோகத்தில் பழுது ஏற்பட்டுள்ளதாக தெரிவித்ததோடு, குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில், பொதுமக்கள் கலைந்து சென்றனர். அதனால், அப்பகுதியில் இன்று காலை இச்சம்பவத்தால் பரபரப்பாக காணப்பட்டது.இது போன்று கொள்ளிடம் கூட்டுநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் பல கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story