நடராஜருக்கு மாசி சதுர்த்தசி வழிபாடு

X

வழிபாடு
கள்ளக்குறிச்சி அடுத்த சாமியார் மடம் செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் உள்ள நடராஜருக்கு நேற்று மாசி சதுர்த்தசி வழிபாடு நடந்தது.இதையொட்டி காலை 8:00 மணிக்கு விநாயகர் பூஜை, நால்வர் துதி, திருவாசகம், பஞ்சபுராணம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளை ஓதி வழிபாடுகள் நடத்தப்பட்டன. மேலும் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகருக்கு பூஜைகள் நடந்தன. இதேபோல, கள்ளக்குறிச்சி, சிதம்பரேஸ்வரர் கோவிலிலும் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தன.
Next Story