உடையார்பாளையம் அருகே மதுபானம் விற்பனை செய்த மூதாட்டி கைது

X

உடையார்பாளையம் அருகே மதுபானம் விற்பனை செய்த மூதாட்டியை கைது செய்து விசாரித்து வருகின்றன.
அரியலூர் மார்ச்.14- அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் வடகடல் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த பாபு மனைவி கலைவாணி(50). என்பவரது வீட்டின் பின்புறம் டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து கலைவாணியை கைது செய்து அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்
Next Story