காலை உணவு திட்டத்தினை எம்எல்ஏ ஆய்வு

அரசு பள்ளியில் வழங்கப்படும் காலை உணவு திட்டத்தினை தர்மபுரி எம்எல்ஏ நேரில் சென்று ஆய்வு
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் டொக்குபோதனஅள்ளி ஊராட்சி தாதநாயக்கன்பட்டி அரசு துவக்கப்பள்ளியில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினரும் பாமக மேற்கு மாவட்ட செயலாளர் எஸ் பி வெங்கடேஸ்வரன் மார்ச் 14 இன்று காலை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் மேலும் காலை உணவினை மாணவர்களோடு அமர்ந்து உண்டார். மேலும் அரிசி பருப்பு காய்கறிகள் மற்றும் உணவு தரமானதாகவும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் இந்த நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாமக நிர்வாகிகள் என பலர் உடன் இருந்தனர்.
Next Story