திருப்போரூா் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவ தெப்போற்சவம்

திருப்போரூா் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவ தெப்போற்சவம்
X
திருப்போரூா் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவ தெப்போற்சவம்
செங்கல்பட்டு மாவட்டம்,திருப்போரூா் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவ தெப்போற்சவம் சிறப்பாக நடைபெற்றது.14 நாள் நடைபெறும் மாசி மாத பிரம்மோற்சவம் இந்த ஆண்டு மாா்ச் 2ந்தேதி தொடங்கி மாா்ச் 15ந்தேதி வரைநடைபெற்றுவருகிறது. திருப்போரூா் கந்தசாமி கோயில் பிரம்மோற்சவம் கடந்த 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தெப்போற்சவம் நேற்று நடைபெற்றது. உற்வசத்தையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மகா தீபாராதனை நடைபெற்று முருகா் வள்ளி தெய்வானையுடன் தெப்பத்தில் எழுந்தருளினாா்.ஏராளமான பக்தா்கள் குளக்கரையில் தேங்காய் உடைத்தும் கற்பூரம் ஏற்றியும் வழிபட்டனா். இதனைத்தொடா்ந்து வெள்ளிக்கிழமை வேடம்பரி பிரபல உற்சவமும், சனிக்கிழமை திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் குமரவேல், மேலாளா் வெற்றி, கோயில் பணியாளா்கள் , சிவாச்சாரியா்கள், ஊா் பொதுமக்கள் மற்றும் ஸ்ரீபாதம் தாங்கிகள் செய்துள்ளனா்.
Next Story