முதல்-அமைச்சர் குறித்து எக்ஸ் தளத்தில் அவதூறு பதிவிட்டவர் கைது

X
சேலம் கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் சங்கர்நாராயணன் (வயது 50). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருடைய எக்ஸ் தளத்தில் மும்மொழி கொள்கை குறித்தும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்தும் அவறூறு பதிவிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. அதே போன்று 10 மொழி கற்கலாம் என்று சந்திரபாபு நாயுடு கூறியதற்கு பாராட்டு தெரிவித்தும் பதிவிட்டு உள்ளதாக தெரிகிறது. இது குறித்து மாநகர சோசியல் மீடியா பிரிவு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் கலவரம் ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சங்கர்நாராயணனை போலீசார் கைது செய்தனர்.
Next Story

