போதையில்லாத தமிழகம் விழிப்புணர்வு பேரணி:

X

தூத்துக்குடியில் போதையில்லாத தமிழகம் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடியில் போதையில்லாத தமிழகம் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் துவக்கி வைத்தார். தூத்துக்குடியில் வல்லநாடு துளசி கல்விக் குழுமம் மற்றும் எம்பவர் இந்தியா சமூக செயல்பாட்டு அமைப்பின் சார்பில் போதையில்லாத தமிழகம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு எம்பவர் இந்தியா கௌரவச் செயலாளர் மற்றும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினர் ஆ.சங்கர் தலைமை தாங்கினார். பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் துவக்கி வைத்தார். நகர காவல் உதவி கண்காணிப்பாளர் மதன் மற்றும் துளசி கல்விக் குழுமத்தின் நிர்வாக அதிகாரி பேராசிரியர் அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியானது தூத்துக்குடி ராஜாஜி பூங்காவிலிருந்து தொடங்கி மாநகராட்சி மகளிர் பூங்காவில் நிறைவடைந்தது. பேரணியில் கல்லூரி முதல்வர் சாந்த குமாரி, பேராசிரியை வள்ளித்தாய் மற்றும் 200க்கும் மேற்பட்ட மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story