வீட்டு பூந்தொட்டிகளை உடைத்து வாலிபர் ரகளை

வீட்டு பூந்தொட்டிகளை உடைத்து வாலிபர் ரகளை
X
இரணியல்
குமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே பட்டரிவிளை பகுதியை சேர்ந்த 28 வாலிபர் ஒருவர் நேற்று முன்தினம்  இரவு அங்குள்ள குருசடி அருகில் நின்ற மின்கம்பத்தில் உள்ள பீஸ் கேரியரை உருவியுள்ளார் . இதனால் தெருவிளக்குகள் அணைந்தது. பின்னர் அங்கிருந்த ஆலய  சொரூபத்தின் முன்பு திருநீறு பூசியும்,  ஆலய  வளாகத்திலுள்ள கிணற்றில் குப்பைகளை கொட்டியும் பிரச்சனை செய்துள்ளார். மேலும் சில வீடுகளில் இருந்த பூந்தொட்டிகளை உடைத்து சேதப்படுத்தியும், மின்விளக்குகளை கழட்டி எடுத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.        இது குறித்து  இரணியல் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் இதே சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து அந்த பகுதி மக்கள் இரணியல் காவல் நிலையத்தில் மீண்டும் தகவல் தெரிவித்துள்ளனர்.     உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வீட்டில் இருந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்  அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என  தெரியவந்துள்ளது. இதையடுத்து தனியார் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு வாலிபரை குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story