சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!

X
சோளிங்கர் அருகே கரிக்கல் ஊராட் சிக்கு உட்பட்ட நரசிங்கபுரம் பகுதியில் சுமார் 80-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நரசிங்கபுரத்தில் இருந்து தனியார் பள்ளி வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தார் சாலை அமைக்கப்பட்டு பல வருடங்கள் ஆகிறது. தற்போது இந்த தார் சாலை ஜல்லி சாலையாக மாறி உள்ளது. இந்த ஜல்லி சாலை வழியாகத்தான் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லவும் தனியார் கம்பெனியில் பணிபுரியும் பணியாளர்கள் செல்லவும் விவசாய பொருட்களை ஏற்றி செல்வதற்கு பிரதான சாலையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளதால் இரவு நேரங்களில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் விபத்துக்குள்ளாகின்றனர். எனவே பொதுமக்கள், விவசாயிகள், மாணவர்கள், தொழிலாளர் கள் நலன் கருதி இந்த சாலையை தார் சாலையாக அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கரிக்கல் சாலையில் இருந்து கரிக்கல், ரெண்டாடி வழியாக கிருஷ்ணாபுரம் வரை செல்லும் குறுக்கு தார்சாலை மிகவும் சேதம் அடைந்து மோசமான நிலையில் ஜல்லி சாலையாக உள்ளது.இந்த சாலையை கரிக்கல் ரெண்டாடி, கிருஷ்ணாபுரம், வீராமத்தூர் ஆகிய கிராம பொதுமக்கள் பிரதான சாலையாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே, இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story

