ஊராட்சி ஒன்றிய அரசு ஆரம்பப்பள்ளி ஆண்டு விழா

X

வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய அரசு ஆரம்பப்பள்ளி ஆண்டு விழா
வேடசந்தூர் ராஜகோபாலபுரம் அரசு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளி மாணவ மாணவிகள் கண்கவர் நடனம் ஆடி அனைவரையும் மகிழ்வித்தனர். இந்நிகழ்ச்சிக்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் கலைவாணி தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி, மற்றும் ஜெயராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி மாணவியர் வரவேற்புரை ஆற்றினர். பள்ளி தலைமை ஆசிரியர் தியாகராஜன் ஆண்டறிக்கை வாசித்தார். வேடசந்தூர் பேரூராட்சி தலைவர் மேகலா கார்த்திகேயன், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் சவுடீஸ்வரி கோவிந்தன், வட்டார வள மையம் பொறுப்பு அலுவலர் செல்வராணி பரிசுகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இடைநிலை ஆசிரியர்கள் சுமித்ரா, சரஸ்வதி, ரோஸ்லின் ஸ்டெல்லா மேரி, அருள், கார்த்திகா, விஜயலட்சுமி, பதினாலாவது வார்டு கவுன்சிலர் கீதா பாலகிருஷ்ணன் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர், ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story