வாலாஜாபேட்டையில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

வாலாஜாபேட்டையில் அ.தி.மு.க.  பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
X
அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
வாலாஜாப்பேட்டை நகரத்திற்கு உட்பட்ட 24 வார்டுகளிலும் பூத்கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், ஆரணி சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் டபிள்யூ.ஜி.மோகன் வர வேற்றார். கூட்டத்தில் கழக வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்துதல், 24 வார்டுகளிலும் பூத்கமிட்டி அமைத்தல், விளையாட்டு வீரர்கள் அணியை பலப்படுத்துவது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. பூத்கமிட்டிக்கு நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். இளைஞர்களுக்கு நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டார். முடிவில் ஜெயலலிதா பேரவை நகர அவைத்தலைவர் டபிள்யூ.ஜி.முரளி நன்றி கூறினார். இதில் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், பிற அணி செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story