திமிரி அருகே சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை!

திமிரி அருகே சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை!
X
குண்டும் குழியுமான தார் சாலை-நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை
திமிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட டி.புதூர் ஊராட்சியில் இருந்து நம்பித்தாங்கல் வரை செல்லும் இணைப்பு தார் சாலை போடப்பட்டு சில வருடங்களே ஆகிய நிலையில் ஆங்காங்கே குண்டும் குழியுமான சாலையாக உள்ளது. இந்த சாலை வழியாக இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊராட்சி ஒன்றிய சாலை என்பதால் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story