சங்கரன்கோவில் அருகே ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் ஆண்டுவிழா

சங்கரன்கோவில் அருகே  ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் ஆண்டுவிழா
X
ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் ஆண்டுவிழா
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி தொடங்கி நூறு ஆண்டுகளை கடந்த நிலையில் தற்போது தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 100-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைமையாசிரியர் பேச்சியம்மாள் தலைமையில் நூறாவது ஆண்டு விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் பள்ளியின் பயின்ற முன்னாள் மாணவன் என்கிற முறையில் பெங்களூருவில் கட்டிட உட்புற வடிவமைப்பாளராக பணிபுரியும், சமூக ஆர்வலர் டாக்டர்.வெள்ளத்துரை என்பவர் சிறப்பு விருந்தினராக வருகை தந்து உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் நான் படித்த பள்ளி நூற்றாண்டு விழா கண்டு அந்த விழாவில் கலந்து கொள்வது மகிழ்ச்சியா இருக்கிறது எனவும், இந்த நேரத்தில் எனது இறுதி காலத்தில் தன்னுடைய பூத உடலை அரசு மருத்துவக் கல்லூரியில் உடல் உறுப்பு தானம் செய்ய இருப்பதாகவும், தென்காசியில் அரசு மருத்துவக் கல்லூரி அமையும் பட்சத்தில் விண்ணப்பம் செய்து மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகள் ஆராய்ச்சிக்காக எனது பூத உடலை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்து உடல் உறுப்பு தானம் செய்ய அனைவரும் முன்‌ வருமாறு கேட்டுக் கொண்டார்.
Next Story