சாத்தான்குளத்தில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

X
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு நிதி தர மறுக்கும் மத்திய அரசை கண்டித்து தட்டார்மடம் மெயின் பஜாரில் திமுகவினர் நடத்திய போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் முக்காடு போட்டு கையில் திருவோடு ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு நிதி தர மறுக்கும் மத்திய அரசை கண்டித்து தட்டார்மடம் மெயின் பஜாரில் திமுகவினர் நடத்திய போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் முக்காடு போட்டு கையில் திருவோடு ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் அத்திட்டத்தை முடக்க நினைப்பதாக மத்திய அரசு மீது எதிர்க்கட்சியினர் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு நிதி கொடுக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதிலும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் மெயின் பஜாரில் திமுக தெற்கு ஒன்றியத்தின் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. திமுக ஒன்றிய செயலாளர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் முக்காடு போட்டு கையில் திருவோடு ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். நூதன முறையில் திமுகவினர் நடத்திய போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story

