ஒன்றிய அரசைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

ஒன்றிய அரசைக் கண்டித்து முன்னாள் அமைச்சர் தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்
100 நாள் வேலை உறுதி திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4034 கோடி நிதியை வழங்காத ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து இன்று மார்ச் 29, தருமபுரி மேற்கு மாவட்டம் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி காரிமங்கலம் மத்திய ஒன்றியம் பட்டகப்பட்டியில்,தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் பி.பழனியப்பன் M.Sc,Phd, தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று 29.03.2025 காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட (MGNREGA) நிதியை தமிழ்நாட்டிற்கு வழங்காமல் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து,மோடி... மோடி... என்னாச்சு எங்க பணம் 4000 கோடி? - சம்பளம் கொடு... சம்பளம் கொடு... 100 நாள் வேலைக்கான சம்பளம் கொடு..” என திமுகவினர் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த நிகழ்வில் காரிமங்கலம் மத்திய ஒன்றிய பொறுப்பாளர் R.கண்ணபெருமாள் அவர்கள் முன்னிலை வகித்தார்.மாவட்ட பொருளாளர் M.M.முருகன்,பொதுக்குழு உறுப்பினர்குட்டிமோகன்,மாவட்ட ஐடிவிங் துணை ஒருங்கிணைப்பாளர் எஸ்.பரணி சக்தி,C.வரதராஜ்ஒன்றிய கழக பொருளாளர் மணி (எ) கோவிந்தராஜன் பிரதிநிதி பிரபாகரன் மற்றும் திமுக முன்னோடிகள் கலந்துக்கொண்டனர்.
Next Story