ஜெயங்கொண்டம் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி கிராம சபை கூட்டம் நடைபெற இருந்த இடத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் கிராம சபை கூட்டம் ரத்து

ஜெயங்கொண்டம் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி கிராம சபை கூட்டம் நடைபெற இருந்த இடத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் கிராம சபை கூட்டம் ரத்து
X
ஜெயங்கொண்டம் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி கிராம சபை கூட்டம் நடைபெற இருந்த இடத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
அரியலூர், மார்ச்.29- ஜெயங்கொண்டம் அருகே அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி கிராம சபை கூட்டம் நடைபெற இருந்த இடத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டது*அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் உலக தண்ணீர் தினத்தை ஒட்டி கிராமசபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது இந்நிலையில் இன்று ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாகப்பந்தல் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடத்த சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஏற்பாடு செய்திருந்தனர் இதனையடுத்து நாகப்பந்தல் ஊராட்சியில் கடந்த பல மாதங்களாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனவும் கடந்த 20 வருடங்களாக சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டி கிராமசபை கூட்டம் நடைபெற இருந்த இடத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டது இது குறித்து அறிந்த ஆண்டிமடம் வருவாய் துறை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகப்பந்தல் கிராமத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Next Story