மேலவாழக்கரை வீரமா காளியம்மன் கோயில் பங்குனி தீமிதி திருவிழா

X
நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த மேலவாழக்கரையில், பழமை வாய்ந்த அருள்மிகு வீரமா காளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் பங்குனி திருவிழா, கடந்த பிப்ரவரி மாதம் 28 -ம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து, அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைப்பெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் வைபவம் நேற்று முன்தினம் இரவு நடைப்பெற்றது. அப்போது, ஆலயத்தில் இருந்து எழுந்தருளிய அம்மன் பூக்குழிக்கு எதிரே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதனைத் தொடர்ந்து, சக்தி கரகம் பூக்குழி இறங்க காப்புக்கட்டி விரதமிருந்த பக்தர்கள், பக்தி பரவசத்துடன் தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். இதில், சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story

