திருப்பத்தூர் அருகே ரயில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

X
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ரயில் நிலையம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் தண்டவாளத்தில் இருந்து மீட்பு. ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ரயில் நிலையம் அடுத்த கிருஷ்ணகிரி மேம்பாலம் அருகே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பதாக ரயில்வே போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே போலீசார் சடலத்தை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அந்த அடையாளம் தெரியாத நபரின் உடல் பாகங்கள் எதுவும் சிதிலம் அடையாமல் தலையில் மட்டும் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் இருப்பதாலும் அதிகாலை நான்கு மணியிலிருந்து அந்த மேம்பாலத்தின் அடியில் எக்ஸ் எல் சூப்பர் இருசக்கர வாகனம் ஒன்று கேட்பாரற்று இருப்பதாக அந்த பகுதி மக்கள் சந்தேகம் எழுப்பியதாலும் அந்த நபர் ரயிலில் சிக்கி இறந்தாரா? தற்கொலையா அல்லது கொலையா என பல்வேறு கோணங்களில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

