கான்கிரீட் சாலை எம்எல்ஏ திறப்பு

கான்கிரீட் சாலை எம்எல்ஏ திறப்பு
X
விளவங்கோடு
விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வன்னியர் ஊராட்சி பகுதியான  வன்னியூர் ஏ ஆர் எஸ் ரேஷன் கடை அருகே இருந்து துணை சுகாதார நிலையம் செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. இந்த சாலை சீரமைக்க ரூ. 5.20 லட்சம் மதிப்பீட்டில் காங்கிரீட் தளம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றது.       தற்போது பணிகள் அனைத்தும் முடிவடைந்து சாலை திறப்பு நிகழ்ச்சி நடந்தது. விளவங்கோடு எம் எல் ஏ தாரகை கத்பட் கலந்து கொண்டு புதிய காங்கிரீட் சாலையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.       இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தோஷ், பிரதீஷ், பெனில், ஜிஜி உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story