தொழிலதிபர் மீது தாக்குதல் : போலீசார் விசாரணை!

தொழிலதிபர் மீது தாக்குதல் : போலீசார் விசாரணை!
X
தூத்துக்குடியில் வீட்டின் முன்பு மது குடிப்பதை தட்டிக் கேட்ட தொழிலதிபரை தாக்கிய 4பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடியில் வீட்டின் முன்பு மது குடிப்பதை தட்டிக் கேட்ட தொழிலதிபரை தாக்கிய 4பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி போல்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராசையா மகன் ஜேக்கப் (69) தொழிலதிபர். இவரது வீட்டு முன்பு 4பேர் கொண்ட கும்பல் மது அருந்தினார்களாம். இதனை பார்த்த ஜேக்கப் அவர்களை கண்டித்துள்ளார். இதனால் அந்த 4பேரும் தகராறு செய்து ஜேக்கப்பை சரமரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவர் பலத்த காயமடைந்த ஜேக்கப் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்கு பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து 4பேர் கொண்ட கும்பலை தேடி வருகிறார்.
Next Story