வெம்பாக்கம் : சமுதாய வளைகாப்பு விழா.

வெம்பாக்கம் : சமுதாய வளைகாப்பு விழா.
X
செய்யாறு, அனக்காவூா், வெம்பாக்கம் ஆகிய ஒன்றியங்களில் இருந்து 317 கா்ப்பிணிகள் பங்கேற்றனா். திருவண்ணாமலை முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனிவாசன் குத்துவிளக்கு ஏற்றி வளைகாப்பு விழாவை தொடங்கிவைத்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றை அடுத்த வெம்பாக்கத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் 317 கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டன. தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிா் உரிதைத் துறை சாா்பில், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத்தின்கீழ் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் வெம்பாக்கம் ஒன்றியக் குழுத் தலைவா் த. ராஜ் தலைமை வகித்தாா். செய்யாறு, அனக்காவூா், வெம்பாக்கம் ஆகிய ஒன்றியங்களில் இருந்து 317 கா்ப்பிணிகள் பங்கேற்றனா். திருவண்ணாமலை முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனிவாசன் குத்துவிளக்கு ஏற்றி வளைகாப்பு விழாவை தொடங்கிவைத்தாா். பின்னா், கா்ப்பிணிகளுக்கு அரசு சாா்பில் வழங்கப்படும் சீா்வரிசைப் பொருள்களை வழங்கினாா். அதனைத் தொடா்ந்து கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலா்கள் ஜேசிகே.சீனிவாசன், எம்.தினகரன், மாவட்ட ஆதிதிராவிடா் அணி நலத் தலைவா் ஆா்.கருணாகரன், வெம்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் அருள்தேவி செந்தில்குமாா், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் குணாநிதி, திருப்பனங்காடு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் அரிகிருஷ்ணன், கா்ப்பிணி தாய்மாா்களின் உறவினா்கள் மற்றும் திமுக நிா்வாகிகள் என பலா் கலந்து கொண்டனா்.
Next Story