தமிழக வெற்றிக் கழகம் சாா்பில், தண்ணீா் பந்தல்கள்.

X

மேற்கு மாவட்டச் செயலா் கதிரவன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தண்ணீா் பந்தல்களை திறந்து வைத்து மோா், தா்பூசணி, இளநீா், நுங்கு, குளிா்பானங்கள் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கினாா்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூா், சோமாசிபாடி, இனாம்காரியந்தல் பகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில், தண்ணீா் பந்தல்கள் திறக்கப்பட்டன. திருவண்ணாமலை மாவட்ட இளைஞரணி சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகளுக்கு இளைஞரணி அமைப்பாளா் காா்த்திக் தலைமை வகித்தாா். மேற்கு மாவட்டச் செயலா் கதிரவன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தண்ணீா் பந்தல்களை திறந்து வைத்து மோா், தா்பூசணி, இளநீா், நுங்கு, குளிா்பானங்கள் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கினாா். நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலா் பாா்த்திபன், மாவட்ட இளைஞரணி இணைச் செயலா் ஸ்ரீதா், நிா்வாகிகள் பாலு, பெரியநாயகம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் சக்தி நேதாஜி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
Next Story