கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
X
மதுரை சோழவந்தான் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கோவில்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் நேற்று ( ஏப்.14)அதிகாலை முதல் பொதுமக்கள் அதிக அளவில் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். இதே போன்று சோழவந்தான் ஐயப்பன் கோவில் ஜெனக நாராயண பெருமாள் கோவில் திருவேடகம் ஏடகநாதர் கோவில் வைகை ஆற்றங்கரை அருகில் உள்ள பிரளயநாத சிவன் கோவில் சனீஸ்வர பகவான் கோவில் தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூல நாத சாமி கோவில் குருவித்துறை சித்திரை ரத வல்லப பெருமாள் கோவில் ஆகிய கோவில்களிலும் ஏராளமான பொதுமக்கள் அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்தனர். பல இடங்களில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story