பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கிய பாஜகவினர்
பாரதிய ஜனதா கட்சி மதுரை வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில் மதுரை மாவட்டம் நீதிமன்றத்தின் அருகே 10 வது நாளாக கோடை வெயில் தாக்குதலிருந்து தற்காத்துக் கொள்ள பொதுமக்களுக்கு தொடர்ந்து நீர் மோர் வழங்கபட்டு வருகிறது. இன்று ( ஏப்.15) மதுரை மாவட்ட தலைவர் மாரி சக்கரவர்த்தி வழக்கறிஞர்கள் பிரிவு தலைவர் அய்யப்பா ராஜா, மற்றும் மீனவர் பிரிவு சிவபிராபாகரன் ஆகியோர் நீர் மோர் வழங்கினார்கள். உடன் பாஜக முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story




