தலைக்கவசம் அணியாமல் சென்ற பெண் காவலருக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை

X
. இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தலைக்கவசம்அணிந்தபடி இருசக்கர வாகன பேரணி புறப்பட்டது, மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் கொடி அசைத்து துவக்கி வைத்தார். மோட்டார் வாகன ஆய்வாளர் ராம்குமார், விசுவநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் மாவட்ட ஆட்சி ஸ்ரீகாந்த் காவல்துறையினர் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நின்று இருசக்கர வாகனத்தில் செல்வோர் தலைக்கவசம் அணிந்து செல்லாதவர்களிடம் தலைகாவசத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி மறுமுறை வரும் பொழுது தலைக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண் போலீசார் ஒருவர் தலைக்கவசம் அணியாமல் வருவதை கண்டு அவரை நிறுத்தி அவருக்கும் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர் கூடி இருந்த மக்கள் அதைக் கண்டு மெல்ல சிரித்தனர்.
Next Story

