கரிவேடு காளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா

வீரமா காளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
காவேரிப்பாக்கத்தை அடுத்த கரிவேடு கிராமத்தில் பழமைவாய்ந்த வீரமா காளியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் திருவிழா நடைபெற்று வருகிறது. அதன்படி சித்திரை முதல் நாளில் 32- வது ஆண்டு சித்திரை திருவிழா நடைபெற்றது.இதனை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து கிராம பொதுமக்கள் ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர். விரதம் இருந்த பக்தர்கள் மாலையில் அலகுகுத்தி அந்திரத்தில் தொங்கியபடி அம்மனுக்கு மாலை அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.இரவு மேளதாளம் முழங்க வானவேடிக்கையுடன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழா குழுவினர், இளைஞர்கள், கிராம பொதுமக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story