ஆலங்குடி ஸ்ரீசித்திவிநாயகர் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை!

ஆலங்குடி ஸ்ரீசித்திவிநாயகர் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை!
X
நிகழ்வுகள்
ஆலங்குடி, செட்டிக்குளம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாள் மண்டகப்படியாக வல்லநாட்டு நகரத்தார் இளைஞர் மன்றம் சார்பில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் வாழை இலையில் அரிசி, மஞ்சள் இட்டு அதில் திருவிளக்குகளை ஏற்றி பூஜை செய்தனர். சிவாச்சாரியார் மந்திரங்கள் முழங்க பெண்கள் தீபம் ஏற்றினர். இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு வழிப்பட்டனர்.
Next Story