அரசு அனுமதியின்றி பனை மரங்களை வெட்டிய இருவர் மீது வழக்குப்பதிவு.

X

திருச்செந்தூர் அருகே அரசு அனுமதியின்றி பனை மரங்களை வெட்டிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
தமிழகத்தின் கற்பக விருட்சமாக விளங்கும் பனைமரங்களை அரசு அனுமதியின்றி வெட்டக்கூடாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி காமராஜபுரம் பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த யாக்கோபு மகன் ஆசீர்வாதம் என்பவருக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் 70க்கும் மேற்பட்ட பனைமரங்கள் உள்ளது. இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 13 பனைமரங்களை அரசு அனுமதியின்றி வெட்டி உள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்ப இடத்திற்கு சென்ற கந்தசாமிபுரம் கிராம நிர்வாக அலுவலர் முத்துகிருஷ்ணன் வெட்டப்பட்ட பனைமரங்களை பார்வையிட்டார். இதையடுத்து அரசு அனுமதி இன்றி பனை மரங்களை வெட்டிய காமராஜபுரத்தைச் சேர்ந்த பால்பாண்டி மகன் ஆசிர் சுவாமிதாஸ் மற்றும் யாக்கோபு மகன் ரூபன் ஆகிய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி என ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு வருகின்றனர். அரசு அனுமதியின்றி பனை மரங்களை வெட்டியதாக இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story