ஞானோதயா இண்டர்நேஷனல் சி.பி.எஸ்.சி பள்ளி ஆண்டு விழா.

X

ஞானோதயா இண்டர்நேஷனல் சி.பி.எஸ்.சி பள்ளியில் அன்று ஆண்டு விழா நடைபெற்றது. ஞானமணி கல்வி நிறுவனங்கள் மற்றும் ஞானோதயா இன்டர்நேஷனல் பள்ளியின் தாளாளர் ப. மாலாலீனா மற்றும் துணை-தாளாளர் அ. மதுவந்தினி அரங்கண்ணல் அவர்களும் குத்துவிளக்கேற்றி விழாவினை துவக்கி வைத்தனர்.
பள்ளியின் 11-ஆம் வகுப்பு மாணவிகள் செல்வி. கீர்த்தி மற்றும் ஹாசினி ஆகிய இருவரும் வரவேற்புரை வழங்கினர்.ஞானமணி கல்வி நிறுவனங்கள் மற்றும் ஞானோதயா இண்டர்நேஷனல் பள்ளியின் தலைவர் முனைவர் தி. அரங்கண்ணல் அவர்கள் தலைமை உரையாற்றினார். அவர் பேசும்பொழுது நமது பள்ளியில் பாடத்திட்டத்துடன் இணைந்து ஒருங்கிணைந்த கலைத்திட்டத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு மாணவர்களின் தனித்திறனை கண்டறிந்து ஒவ்வொரு மாணவரும் வெற்றி பெற வைப்பதே நமது பள்ளியின் நோக்கம் எனக்கூறினார். கடந்த ஆண்டு நமது பள்ளி மாணவி 495 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்ததற்கு மாணவி, ஆசிரியர்கள் மற்றும் முதல்வரை பாராட்டினார். மேலும் மாணவர்கள் படிப்பில் மட்டும் வெற்றி பெற வைப்பதை பள்ளியின் நோக்கமாக இருந்தாலும் அவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் எடுஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனுத்துடன் இணைந்து அனைத்து மாணவர்களையும் விளையாட்டுத்துறைகளிலும் மேம்படுத்துவதே இப்பள்ளியின் நோக்கம் எனக்கூறினார்.ஞானோதயா இண்டர்நேஷனல் பள்ளியின் முதல்வர் முனைவர் . ரோஸ்லின் பபிதா அவர்கள் பள்ளியின் ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். பள்ளியின் நிர்வாக அதிகாரி கோபாலகிருஷ்ணன் வாழ்த்துறை வழங்கினார்.ஸ்ரீசைத்தன்யாவின் இன்பினிட்டி லேர்னிங்ஸ் அக்டமிக் கவுன்ஸிலர் கார்த்திகேய சிவா பேசுகிையல் ஸ்ரீசைத்தன்யாவின் இன்பினிட்டி லியோனிங்கின் மூலம் நீட் மற்றும் ஜெ.இ.இ. நுழைவுத்தேர்வுக்கான வகுப்புகளை ஞானோதயா பள்ளி மிகச் சிறப்பாக செயல்படுவதாக கூறினார்.சிறப்பு விருந்தினராக விஜய் டிவி புகழ் அறந்தாங்கி நிஷா அவர்கள் கலந்து கொண்டு சிரப்புறையாற்றினார். அவர் பேசுகையில் குழந்தைகள் அறிவுசார் மற்றும் ஒழுக்கமாணவர்களாக வளர்வதற்கு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கு இன்றியமைத்தாக அமைகிறது எனவும் மாணவர்களை வெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பிடுவது தவறு என்றும் மாணவர்களின் தனித்திறனை கண்டறிந்து அதில் தன்னம்பிக்கையுடம் செயல்பட வைப்பதே சிறப்பான செயல் என்றும் மேலும் இதைப்பற்றி பள்ளியின் தலைவர். அரங்கண்ணல் அவர்களிடம் கேட்கும்பொழுது அனைத்து மாணவர்களுக்கும் எவ்வித கட்டணமும் அல்லாமல் பள்ளியில் பாடத்திட்டத்துடன் இணைந்து ஒருங்கிணைந்த கலைத்திட்டத்திற்கும் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என்றார். மாணவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றவாறு முறையாக வடிவமைக்கப்பட்ட ஸ்னாக்ஸ் மற்றும் மதிய உணவு வழங்கப்படுவதை கேட்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் கூறினார். பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் தாம் நினைத்தை சாதிக்க வேண்டும் என நினைக்கின்றனர் அதில் தவறில்லை. ஆனால் தங்கள் பிள்ளைகள் எத்துறையில் ஆர்வமாக உள்ளனர் என கண்டறிந்து அதற்கு துணை நின்றால் அதில் தனித்துவமாக உருவாகுவார்கள் என கூறினார். மேலும் இப்பள்ளி ஒரு வகுப்பிற்கு 25 மாணவர்கள் என செயல்படுவதால் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆசிரியர்கள் தனிக்கவனம் செலுத்த முடியும் என்ற இப்பள்ளியின் செயல்பாடு என்பது வரவேற்கத்தக்கதாக உள்ளது எனவும் தனது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை நகைச்சுவையுடன் கூறி பார்வையாளர்களை மகிழ்வித்தார். விழாவினைத் தொடர்ந்து பள்ளிக் குழந்தைகளின் நடனங்கள் மற்றும் நாடகங்கள் போன்ற பலவிதமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளியின் 9-ஆம் வகுப்பு மாணவி செல்வி. இனியா நன்றி உரை வழங்க விழா இனிதே நிறைவடைந்தது.
Next Story