நாமக்கல் மாநகரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு!

நாமக்கல் மாநகரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு!
X
முன்னாள் MLA K.P.P.பாஸ்கர் தலைமை வகித்து நீர் மோர் பந்தலை திறந்து வைத்து,பொதுமக்களுக்கு நீர் மோர், கம்பங்கூழ், தர்பூசணி பழங்களை வழங்கினார்.
நாமக்கல் மாநகர அதிமுக சார்பில், தந்தை பெரியார், அண்ணா, எம்ஜிஆர் சிலை அருகே, அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.மாநகர செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.பி.பி. பாஸ்கர் தலைமை வகித்து நீர் மோர் பந்தலை திறந்து வைத்து,பொதுமக்களுக்கு நீர் மோர்,கம்பங்கூழ், தர்பூசணி பழங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் மயில் சுந்தரம், ஒன்றிய செயலாளர்கள், நகர,பேரூர் கழக நிர்வாகிகள் ,வார்டு கழக செயலாளர்,மகளிர் அணி நிர்வாகிகள்,சார்பு மன்ற பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story