ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் இரண்டு நாள் சர்வதேச கருத்தரஙகம்

ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் இரண்டு நாள் சர்வதேச கருத்தரஙகம்
X
ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் இரண்டு நாள் சர்வதேச கருத்தரஙகம்
செங்கல்பட்டு மாவட்டம்,மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியின் கணினி அறிவியல் பொறியியல் துறை மற்றும் மெக்சிகோ நாட்டின் துஜானா நகரில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனம் சார்பாக மேலாண்மை கண்டுபிடிப்புகளுக்கான கணிதம், கணினிமயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவு குறித்த இரண்டு நாள் சர்வதேச கருத்தரஙகம் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் கல்லூரியின் தாளாளர் சக்தி முனைவர் கோ.ப செந்தில்குமார் தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் ராஜா, கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள், கல்லூரியின் டீன் முனைவர் ராமசாமி மற்றும் நிர்வாக அலுவலர் சதானந்தன் மற்றும் கணிப்பொறி அறிவியல் துறை தலைவர் தயா மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர் முன்னிலையில் புல் சாயி நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி முனைவர் சக்தி அருண்பிரசாத் மற்றும் மெக்சிகோவில் உள்ள தூஜானா தொழில்நுட்ப நிறுவனத்தின் பேராசிரியை ஏஞ்சல்ஸ் குஸாடா, சண்டிகர் பல்கலைக்கழகத்தின் கணிப்பொறி அறிவியல் துறையின் துணை இயக்குனர் மற்றும் பேராசிரியர் அபிஷேக்குமார் மற்றும் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் கணிப்பொறி அறிவியல் துறையின் பேராசிரியர் முனைவர் ஜெயராஜ் ஆகியோர் இணைந்து சர்வதேச கருத்தரங்கத்தின் விழா மலரை வெளியிட இக்கல்லூரியின் முதல்வர் முனைவர் ராஜா அவர்கள் பெற்றுக் கொண்டார். இக்கருத்தரங்கில் 300க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன அதில் குறிப்பாக மெக்ஸிகோ, துபாய் அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியாவின் முழுவதும் இருந்து ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இந்த ஆய்வு கட்டுரைகளின் நடுவர்களாக இருந்து சிறந்த ஆய்வு கட்டுரைகளை சிறப்பு விருந்தினர்கள் தேர்ந்தெடுத்தார்கள். சிறந்த ஆய்வு கட்டுரைகளுக்கு பரிசுத்தொகை மற்றும் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த சர்வதேச கருத்தரங்கில் பங்கு பெற்ற அனைவருக்கும் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.
Next Story