ராசிபுரத்தில் ஸ்ரீ ராமர் நவமி பூஜை : ஸ்ரீ ராமர் சீதா தேவி திருக்கல்யாண உற்சவம் ஏராளமானோர் சாமி தரிசனம்..

X

ராசிபுரத்தில் ஸ்ரீ ராமர் நவமி பூஜை : ஸ்ரீ ராமர் சீதா தேவி திருக்கல்யாண உற்சவம் ஏராளமானோர் சாமி தரிசனம்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கடந்த ஏப்ரல் 6.தேதி முதல் இன்று 16ஆம் தேதி வரை பத்து நாட்கள் நாயுடு பஜனை படத்தில் ஸ்ரீ ராமர் சீதாதேவி உற்சவர் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும் இந்த ஆண்டும் பஜனை மடத்தில் ஸ்ரீ ராமர் சீதாதேவி சாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பல்வேறு பக்தி பாடல்கள், பஜனை பாடல்கள் பாடி சிறப்பாக கொண்டாடி தொடர்ந்து ஆண்கள் கோலாட்டம் அடித்து பக்தி பரவசத்துடன் ஆடி பாடி மகிழ்ந்தனர். இந்த ஸ்ரீ ராமர் நவமி முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு செவ்வாய்க்கிழமை செட்டிக்கார நாயுடு குடும்பத்தார் ,பாதர் நாயுடு கிருஷ்ணவேணி அம்மாள் அவர்கள் இல்லத்தில் இருந்து மா, பலா,வாழை, சப்போட்டா, திராட்சைப்பழம், அதிரசம்,ரவா லட்டு, பேரிச்சம்பழம் மேலும் பூமாலை, சாமிக்கு திருமாங்கல்யம், பட்டு வஸ்திரம் உள்ளிட்ட சீர்வரிசை தட்டுகளுடன் பஜனை மடத்தில் ஸ்ரீ ராமர் சீதா திருக்கல்யாண உற்சவம் மங்கல இசையுடன் யாகங்கள் நடைபெற்று திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சியாக நடைபெற்றது. மேலும் இதில் ஏராளமான கலந்து கொண்டு திருக்கல்யாண உற்சவத்தை தரிசனம் செய்து அன்னதானம் பெற்றுச் சென்றனர். புதன்கிழமை காலை மஞ்சள் நீராடல் மாலை ஸ்ரீ ஆஞ்சநேயர் பூஜையுடன் விழா நிறைவு பெற்றது. மேலும் ராசிபுரம் நாயுடுகள் சங்கத்தின் சார்பில் தினந்தோறும் பல்வேறு கட்டளைதாரர்கள் ஸ்ரீ ராமர் நவமி உற்சவம் விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் தலைவர் சிட்டி (எ) வரதராஜன், செயலாளர் பாலசுப்பிரமணி, பொருளாளர் ரஞ்சித், மற்றும் உப தலைவர்கள் ஜி. ராமலிங்கம் (எ) தினகர், எஸ். சீனிவாசன், இணைச் செயலாளர்கள் கே.பாபு, ஆர். சக்திவேல், எஸ். ஆர். சீனிவாசன், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், மோகன், பாலாஜி ,பிரபாகரன், செழியன், செல்வராஜ், செல்வகுமார், ரமேஷ் கிருஷ்ணன், பிரேம்குமார், ரமேஷ், பூபதி, சங்கர் கணேஷ், ரகுபதி, சபரி பாலுசாமி, மணிவண்ணன், யோகராஜன், பாலகிருஷ்ணன், தரணி பாபு, விஜயகுமார், கோகுல், தமிழ்ச்செல்வன், சுரேஷ்குமார், கார்த்திகேயன் உள்ளிட்ட நாயுடு சமூகத்தார்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Next Story