வல்வில் ஓரி சிலம்பாட்ட சங்கத்தின் சார்பாக நடுவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம்..

வல்வில் ஓரி சிலம்பாட்ட சங்கத்தின் சார்பாக நடுவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம்..
X
வல்வில் ஓரி சிலம்பாட்ட சங்கத்தின் சார்பாக நடுவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம்..
வல்வில் ஓரி சிலம்பாட்ட சங்கத்தின் சார்பாக நடுவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் நடைபெற்றது. இதில் ஒழுக்கத்துடன் கூடிய தற்காப்பு பயிற்சி முறைகளும், பெண்களுக்கான தற்காப்பு பயிற்சி முறைகளும், தனித்திறமை போட்டியில் மதிப்பெண் வழங்கும் முறைகள், தொடு புள்ளி முறையில் மதிப்பெண் வழங்குதல் போன்ற பல்வேறு பயிற்சி முறைகள் பற்றி விளக்கமாக பயிற்சி அளிக்கப்பட்டது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 40-க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பயிற்சி முகாமிற்கான ஏற்பாடுகளை வல்வில் ஓரி சிலம்பாட்ட சங்கத் தலைவர் பன்னீர், செயலாளர் சிவகுமார், துணைத் தலைவர் பத்மநாபன், இணை செயலாளர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story