தமிழரசனின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

X

ஜெயங்கொண்டம் தமிழர் நீதி கட்சி சார்பில் தமிழரசனின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
அரியலூர், ஏப்.16- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கட்சி அலுவலக கூட்ட அரங்கில் ஏர் உழவர் சங்கம் சார்பில் தமிழரசனின் 75 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தமிழர் நீதி கட்சியின் தலைவர் சுபா.இளவரசன் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்திற்கு கவியரசு இளவரசன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் தமிழர் மற்றும் தமிழினம் காப்பதற்கு அனைவரும் ஒன்றிணைைய வேண்டும், மத்திய அரசின் மும்மொழி கொள்கையை எதிர்க்க வேண்டும்,விவசாயிகள் நலனை காப்பதற்கு அரசிடம் தேவையான திட்டங்கள் மூலம் வலியுறுத்தி அனைத்து விவசாயிகளும் பயனடைய நாம் முன் வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டு வீரவணக்கம் செலுத்தினர். இதில் தமிழ் பற்றாளர்கள் கட்சி நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் மாவட்ட செயலாளர் சிவகுமார் நன்றி கூறினார்.
Next Story