ரோஜா கண்காட்சிக்காக பூங்காவை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்

X

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கவும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
ரோஜா கண்காட்சிக்காக பூங்காவை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கவும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். சுற்றுலாப் பயணிகள் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, பைக்காரா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, தொட்டபெட்டா போன்ற சுற்றுலாத்தளங்களில் குவிந்து வருகின்றனர். அவர்களை மகிழ்விக்கும் விதமாக ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா போன்ற இடங்களில் வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட மலர் செடி ரகங்கள் வைக்கபட்டுள்ளன. அதேபோல் அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகளை தாயகமாகக் கொண்ட டேலியா, சால்வியா, பிளாகஸ், ஜின்னியா, பெகோனியா, பேன்சி, ஹோலிஹாக், டெல்பினியம், ஜெரானியம், பெட்டுனியா, ஸ்டாக்ஸ், கேலன்டுலா, ஸ்வீட், வில்லியம் உட்பட பல்வேறு வகையான மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு தற்போது பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. ஊட்டிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துச் செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா மற்றும் ரோஜா பூங்காவிற்கு செல்வது வழக்கம்.இதனால், இவ்விரு பூங்காக்களையும் தோட்டக்கலைத் துறையினர் சிறந்த முறையில் பராமரித்து வருகின்றனர்.ரோஜா பூங்காவில் ஆண்டு தோறும் மே மாதம் முதல் வாரத்தில் ரோஜா கண்காட்சி நடத்தப்படும். இதற்காக டிசம்பர் மாதமே இப்பூங்காவை தயார் செய்யும் பணிகள் துவக்கப்படும். ஜனவரி அல்லது பிப்ரவரி மாதங்களில் ரோஜா செடிகள் கவாத்து செய்யப்படும். தொடர்ந்து உரமிடுதல் மற்றும் மருந்து தெளித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். ஏப்ரல் மாதம் முதல் வாரத்திற்கு மேல் மலர்கள் பூத்துவிடும். ஆனால், இம்முறை பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் எதிர்பார்த்த அளவிற்கு மழை பெய்யாத நிலையில், செடிகள் வளர்வதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது இம்முறை மே மாதமே ரோஜா பூங்காவில் மலர்கள் பூக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரோஜா கண்காட்சிக்காக பூங்காவை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வரும் மே மாதம் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளே பூங்கா முழுவதும் பூத்து குலுங்கம் ரோஜாக்களை கண்டு ரசிக்கலாம்.
Next Story