கப்ளாம்பாடி பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது.

X
மேல்மலையனுார் அடுத்த கப்ளாம்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் 2008-09ம் கல்வி ஆண்டில் 10ம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு கூட்டம் நடந்தது. தலைமை ஆசிரியர் (பொறுப்பு) தங்கமணி தலைமை தாங்கினார்.ஒன்றிய துணைச் சேர்மன் விஜயலட்சுமி முருகன், ஊராட்சி தலைவர் ராமசாமி, கல்வியாளர் வேலாயுதம், துணைத் தலைவர் சாந்தி, மேலாண்மைக் குழு தலைவர் அம்சவேணி முன்னிலை வகித்தனர்.ஆசிரியர்கள் தேவராசன், சுந்தரேசன், கதிர்வேல், சரவணன், சாந்தி, கோட்டீஸ்வரி, குமாரி, மகாலட்சுமி ஆகியோரை முன்னாள் மாணவர்கள் கவுரவித்தனர்.ஆசிரியர் கண்ணதாசன் உள்ளிட்ட ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டனர். மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை முன்னாள் மாணவர்கள் வழங்கினர்.
Next Story

