முதன்மைச் செயலாளர் - அமைச்சர் கே.என்.நேரு சிறப்புரை! பெரம்பலூர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்

X
கழக முதன்மைச் செயலாளர் - அமைச்சர் கே.என்.நேரு சிறப்புரை! பெரம்பலூர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்! மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் அறிக்கை! பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு, கழகத் துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி., வழி காட்டுதல்படி, 18.05.2025, ஞாயிற்றுக்கிழமை,மாலை 6.00 மணியளவில் திருச்சி சாலை, தீயணைப்பு நிலையம் எதிரில் உள்ள உள்ள சுபா ரெசிடென்சியில், பெரம்பலூர் மாவட்ட கழக ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், கழக முதன்மைச் செயலாளரும் - நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான - மண்டல பொறுப்பாளர் கே.என்.நேரு கலந்து கொண்டு, கழக வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார். போக்குவரத்துத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், கே.என்.அருண்நேரு.எம்.பி., சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், தொகுதி பொறுப்பாளர்கள் தங்க.சித்தார்த்தன், ஏ.கே.அருண் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய,நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், மாவட்ட அணி அமைப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Next Story

