அதிமுக சார்பில் இரத்த தான முகாம்
மதுரை புதூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் இன்று (மே.17) காலை மதுரை மாநகர் மற்றும் புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக ஐடி விங் சார்பாக இரத்ததான முகாம் தொடங்கியது. இதில் பெருந்திரளான அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் தன்னார்வலர்கள் இளைஞர்கள் காலை ஏழு மணி முதலே ரத்ததானம் செய்ய பதிவு செய்து வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை அதிமுக ஐடி விங் செய்து வருகிறது.
Next Story




