மாணவர்களுக்கான நான் முதல்வன் கல்லூரி கனவு நிகழ்ச்சி

X
திருப்போரூர் வட்டம், படூர் பேராசிரியர் தனபாலன் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் மேல்நிலை வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கான 'நான் முதல்வன்' கல்லூரி கனவு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் கல்லூரி சாா்பில் 5 மாணவ, மாணவிகளுக்கு மூன்றாண்டுகள் மேல்நிலைப் படிப்பு படிப்பதற்கான உதவித்தொகையை மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் வழங்கினாா். இதில், மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு கல்வி தொடா்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. உயா்கல்வி பெறுவதற்கான ஆலோசனைகள் கல்வியாளா்கள் வழங்கினா். இந்த நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சொ.கற்பகம், பேராசிரியா் தனபாலன் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரித் தாளாளா் புகழேந்தி தனபாலன், மாவட்ட கல்வி அலுவலா்கள் காமாட்சி, ராம.அங்கையற்கண்ணி மற்றும் மாணவ, மாணவிகள் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
Next Story

