விராலிமலை அருகே குட்கா பொருள் விற்றவர் கைது

X
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்த மீனவேலியை சேர்ந்தவர் மாமுண்டி (63). இவர் சித்திராம்பட்டி கலையரங்கம் அருகே குட்கா பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்தார். இதனை அடுத்து அந்த வழியே, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த விராலிமலை காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 140 கிராம் மதிப்புள்ள குட்கா பொருளை பறிமுதல் செய்து பிணையில் விடுவித்தனர்.
Next Story

