அய்யனார் கோயிலில் உண்டியல் புதுநிலைப்பட்டி மக்கள் எதிர்ப்பு

அய்யனார் கோயிலில் உண்டியல் புதுநிலைப்பட்டி மக்கள் எதிர்ப்பு
X
பொது செய்திகள்
திருமயம் தாலுகா புதுநிலைப்பட்டி யில் கண்ணுடைய அய்யனார் கோயில் உள்ளது. கிராமமக்கள் பராமரித்து வந்த இந்த கோயில் நிர்வாகத்தை இந்து சமய அறநிலையத்துறை ஏற்றுக்கொண்டது. இந்நிலையில் செயல் அலுவலர் மற்றும் அலுவலர்கள் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் கோயிலுக்கு வந்து இந்து சமய அறநிலையத் துறை சார்பில் உண்டியல் வைத்தனர். இதற்கு கிராமமக்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். அறநிலை யத்துறையை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story