அறந்தாங்கி - திருநள்ளாறுக்கு நேரடி பஸ் இயக்க கோரிக்கை

அறந்தாங்கி - திருநள்ளாறுக்கு நேரடி பஸ் இயக்க கோரிக்கை
X
பொது பிரச்சனைகள்
புதுக்கோட்டைக்கு அடுத்தப்படியாக இரண்டாவது மாவட்டத்தில் பெரிய நகரமாக அறந்தாங்கி உள்ளது. இங்கிருந்து சென்னை, கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி உட்பட பல்வேறு பகு திகளுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல் குடி ஆகிய தாலுகாவை சேர்ந்த பயணிகள் அறந் 'தாங்கி வந்தே வெளியூர் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த பகுதியில் இருந்து ஏராளமான பக் தர்கள் திருநள்ளாறு கோயிலுக்கு சென்று வருகின் றனர். இவர்கள், தஞ்சாவூர் சென்று அங்கிருந்து 2 பஸ்கள் மாறி செல்ல வேண்டியுள்ளது. இதனால் கூடுதல் செலவுடன், கால விரையமும் ஏற்படுகிறது. இதை தவிர்க்க அறந்தாங்கியில் இருந்து கீரமங்கலம், பட்டுக்கோட்டை, மன்னார்குடி, கும்பகோணம். பேரளம் வழியாக திருநள்ளாறுக்கு நேரடி பஸ் இயக்க அரசு போக்குவரத்துக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story