கோவை: பா. சிதம்பரம் சிந்தித்து பேசக்கூடியவர் - கார்த்தி !

X
கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கார்த்திக் சிதம்பரம் நேற்று பேசும் போது, முன்னாள் நிதி அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர், 50 ஆண்டு காலத்திற்கு மேலாக அரசியலில் இருக்கிறார். அவரை அறிந்தவர்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும் அவர் எதைப் பற்றி பேசினாலும் சிந்தித்து நிதானமாக பேசக்கூடியவர். அவர் சிந்திக்காமல் இதுவரை ஒரு பேட்டியோ அறிக்கையோ கொடுத்தது கிடையாது. அவர் ஒரு புத்தக வெளியீட்டு விழாவிலே ஆங்கிலத்திலே பேசினார். அதை முழுமையாக கேட்டவர்களுக்கு அதன் அர்த்தம் நன்றாக தெரியும். சோசியல் மீடியாக்களில் வருகிற ஒரு தலைப்பை வைத்துக்கொண்டு, ஒரு உரையை முழுமையாக கேட்காமல் விமர்சனம் செய்யக்கூடாது. அவர் பேசியது என்ன? இந்திய அளவிலே இந்தி கூட்டணி ஒற்றுமையாக இருக்கிறதா ? வலிமையாக இருக்கிறதா என்று கேட்டால்? இல்லை, பாஜகவுக்கு நிகராக இல்லை என்று எதார்த்த உண்மையை, கள நிலவரத்தை எடுத்துச் சொன்னார். இந்திய அளவிலே அது வலிமையாக இல்லை என்று எடுத்து கூறும் போது, அது தமிழ்நாட்டில் வலிமையாக இல்லை என்று அர்த்தம் கிடையாது. தமிழகத்தை பொறுத்தவரை இண்டி கூட்டணி ஒற்றுமையாக இருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திராவிட முன்னேற்ற கழகம் தலைமை தாங்குகிறது. அந்த கூட்டணிகளை காங்கிரஸ் கட்சி அங்கம் வகிக்கிறது என்று கூறினார்.
Next Story

