அமைச்சர்கள் தலைமையில் திமுகவினர் ஆலோசனை கூட்டம்

மதுரையில் அமைச்சர்கள் தலைமையில் திமுகவினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மதுரை மேலூர் சாலையில் உத்தங்குடி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (மே.23) காலை மதுரை திமுக தெற்கு வடக்கு மற்றும் மாநகர் பகுதிகளை சேர்ந்த திமுகவினரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வரும் 31ம் தேதி மற்றும் 1ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள முதல்வரின் நிகழ்வு மற்றும் பொதுக்குழு கூட்டம் குறித்தும் முதல்வரை வரவேற்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்திற்கு வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இக்கூட்டத்தில் தளபதி எம்எல்ஏ, சோழவந்த எம்எல்ஏ வெங்கடேசன், முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம், தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் உள்ளிட்ட பல முக்கிய திமுக நிர்வாகிகள், அனைத்து அணியை சேர்ந்த பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டார்கள்.
Next Story